என்னைப் பற்றி...

Blog Archive

Wednesday, April 20, 2011

முன்னொரு இரவில் பெய்த
அடர்த்தி மழையில்
எனக்கும் உனக்குமான அரிதாரங்கள்
கொஞ்சம் கொஞ்சமாக
கரைந்து நழுவிக் கொண்டிருக்கின்றன.

நெருக்கமான நேரங்களில் மட்டுமே
அவை கரைய தொடங்கும் காரணம்
இதுவரை பிடிபடவில்லை.

இருந்தும் நெருக்கமாய் நெருங்கி கொள்கிறோம்
நெருங்கி நெருங்கி... கசங்கிப்போகிறோம்.

கசங்கிய உறுப்புகளிளெல்லாம்
அரிதாரம் கரைந்த மனம்
பாதி கரைந்தும் பாதி கரையாமலும்
அப்பிகிடக்கிறது...
இருந்தும் இருவரும் லயித்து கிடக்கிறோம்.

நடுமுதுகின்
தண்டுவடத்தின் வழி
ஊர்ந்து சர்ப்பமென
கீழிறங்கும் என் கவிச்சை வெளியை
உன் கவிச்சை வெளிக்குள்
திணித்து திணித்து சோர்ந்துபோகிறேன்...
ஆனால்...
இரவின் நீட்சி மட்டும் சோர்வடையவில்லை.

கறுப்பு இரவில்
அடர்த்தியாய் கரைந்து நழுவும்
அரிதார வண்ணங்களின் வழி
நிறைந்திடும் நிறமாலைகளை
அள்ளி அள்ளி முகத்தில்
அப்பியவாரே
நம் பிள்ளைகளுக்கான
வாழ்வியல் முறைமைகளை
தடம்பதியக் கிடத்துகிறோம்.

இனியும்
இதுபோல்..
காலம் காலமாய்..
யுகம் யுகமாய்...
பல பல இரவுகளாய்
நித்திய யோக நிலையாய்
தொடரச் செய்த நம் முன்னோர் வழி
வழிந்து மீளுகிறது..
இப்புனித இரவுக்கான கறுப்பு மழை.

3 comments:

ajayan bala baskaran said...

யாயும் யாயும் யாராகியரோ ? எனும் செம்புலபெயல் நீரார் வரிகளை ஒத்த சிந்த்னை .. நல்ல வளமான மொழி ..வாழ்துக்கள்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நெருக்கமான நேரங்களில் மட்டுமே
அவை கரைய தொடங்கும் காரணம் //
ஒரு முறை கரைந்த பின் மறுபடியும் பூசிக்கொள்ளுமா அரிதாரம்,
உரசல்கள் வரும் வரை கொள்ளாது என்பது என் அபிப்பிராயம்.

கொற்றவை said...

நல்ல தெளிவான , அழுத்தமான வார்த்தைகளுக்குள் ஒளிந்துகிடக்கும் உண்மைகள்....அடுத்துவரும் மழைக்காக காத்திருக்த்தான் செய்கிறது....

அருமை!!!!

Post a Comment